சமவேலைக்கு சம ஊதியம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கைது

 
கைது
 

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 26-ம் தேதி டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களும் போலீசாரால் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டனர்.

2009 மே 31-க்கு முன் பணியில் இருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் பெரும் வேறுபாடு உள்ளது. இதனை ஊதிய முரண்பாடு எனக் கூறி ஆசிரியர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பலமுறை மனுக்கள் அளித்தும் தீர்வு கிடைக்காததால் போராட்டம் மேலும் வலுத்துள்ளது.

இதனிடையே, திமுக அரசுக்கு எதிரான மற்றொரு போராட்டமாக, சென்னை பாரிமுனையில் தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!