புத்தாண்டிலும் திரண்ட ஆசிரியர்கள்... சென்னையில் 7-வது நாளாக போராட்டம் - ஆசிரியர்கள் கைது!

 
ஆசிரியர்கள் போராட்டம்

தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி சென்னையில் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று தீவிரமடைந்தது.

2009-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதியத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது. "ஒரே தகுதி, ஒரே வேலை" இருந்தும் ஊதியத்தில் நிலவும் இந்த முரண்பாட்டைக் களைய வேண்டும் என்றும், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என்றும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் வலியுறுத்தி வருகிறது.

நர்ஸ் செவிலியர்கள் போராட்டம்

சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் (BEO Office) அருகே இன்று ஆசிரியர்கள் திரண்டனர். காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தின் காரணமாக எழும்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

ஆசிரியர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க ஏற்கனவே ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலமுறை வாக்குறுதி அளிக்கப்பட்டும் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதே ஆசிரியர்களின் வேதனையாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!