மே 24ம் தேதி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு!!

 
கலந்தாய்வு

தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24ம் தேதி தொடங்க உள்ளது.  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு மே 25ம் தேதி நடைபெறுகிறது.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26ம் தேதி நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்று, இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு  மே 29ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்  அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்  மே மாதம்  பதவி  உயர்வு மற்றும் பணியிட மாற்றம்  காரணமாக பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மே 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இதற்காக ஆன்லைன் மூலம்  ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை   பல்வேறு ஆசிரியர்கள் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்து இருந்தனர்.

ஆசிரியர்


இந்நிலையில்    நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக  அறிவித்தது. மீண்டும் மே 15ம் தேதி முதல் 26 ம் தேதி வரை நடைபெறும் எனக்  கூறப்பட்டிருந்தது.

கலந்தாய்வு

இந்நிலையில்,  மே 22 கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இன்று  மே 22ம் தேதி  நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web