கொடூரத்தின் உச்சம்... 4 வயது சிறுவனை மரத்தில் கட்டித் தொங்கவிட்ட ஆசிரியர்கள்... அதிர்ச்சி வீடியோ!

 
blur blur
 

 

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ் வாஹினி வித்யா மந்திர் பள்ளியில், வெறும் 4 வயதான மாணவனுக்கு விதிக்கப்பட்ட கொடூரமான தண்டனை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடம் செய்யாததற்காக, இரண்டு பெண் ஆசிரியர்கள் குழந்தையின் ஆடைகளை அகற்றி, பள்ளி வளாகத்திலுள்ள மரத்தில் கயிற்றால் கட்டி தொங்கவிட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாராயண்பூர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் அருகிலுள்ள கட்டிடத்தின் மீது இருந்து ஒரு இளைஞர் எடுத்த வீடியோவின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வீடியோவில் குழந்தை மரத்தில் உதவியற்ற நிலையில் மணிக்கணக்குகள் தொங்கினான் என தெரிகிறது. காஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன் ஆகிய ஆசிரியர்கள் அருகில் நின்று கொண்டிருந்தாலும், குழந்தை பலமுறை வேண்டிக் கொண்டபோதும் உதவ இயலவில்லை. இதனால் பெற்றோர்கள் கடும் கோபம் வெளியிட்டு, பள்ளி நிர்வாகத்தையும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையும் கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

வீடியோ பரவியதும் கல்வித்துறை அதிகாரிகள் அவசரமாக பள்ளிக்கு சென்று விசாரணை தொடங்கினர். “இது முற்றிலும் தவறு” என BEO டி.எஸ். லக்ரா தெரிவித்தார். பள்ளி நிர்வாகமும் “இது எங்களின் மிகப்பெரும் தவறு” என ஒப்புக்கொண்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்களில் ஒருவரும் “தவறு செய்துவிட்டேன்... இது முதல் முறை” என மன்னிப்பு கேட்டுள்ளார். குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்; ஆனால் இந்த சம்பவம் பள்ளி பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!