சம ஊதியம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்… கைது, பரபரப்பு!
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தபோதும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்தது. பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என அரசு அறிவித்தது. இதற்கு பதிலளித்த போராட்டக்குழு, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கூடுவதை அறிந்தே அரசு இந்த உத்தரவை பிறப்பித்ததாக கூறியது.
ஏற்கனவே அறிவித்தபடி, இன்று சென்னை எழும்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் திரண்டனர். 14-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், போலீசார் ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
