ஆசிரியர்கள் நெற்றியில் ‘181’ எழுதி நூதன போராட்டம்!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி கடந்த 12 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
குறிப்பாக 2021 தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 181-ல், பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவும் தெரிவித்திருந்தார். ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெற்றியில் ‘181’ என எழுதியும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பதாகைகளை ஏந்தியும் அவர்கள் நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த போராட்டம் கல்வித்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
