ஆசிரியர்கள் போராட்டம்: பள்ளிக் கல்வி இயக்குநர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை - தீர்வு எட்டப்படுமா?

 
ஆசிரியர்கள் போராட்டம்

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அறிவுறுத்தலின்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் நேற்று முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் ஆசிரியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்

தங்களது ஊதிய முரண்பாடுகளை ஆதாரங்களுடன் விளக்கிய ஆசிரியர்கள், "கல்விக்காக அரசு செலவிடும் தொகையைச் செலவாகப் பார்க்காமல், அது ஒரு முதலீடு" என்று சுட்டிக்காட்டினர். ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த இயக்குநர்கள், இதனை உடனடியாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர்.

ஆசிரியர்கள்

இது குறித்து பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், "எங்கள் கோரிக்கைகளை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம். நிதித்துறை எங்களுக்குச் சாதகமான முடிவை அறிவிக்க வேண்டும். முறையான தீர்வு எட்டப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது" என்றார்.

2009ம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிலவும் ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பதவி உயர்வு மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தம் ஆகியவைகளைக் கோரிக்கைகளாக வைத்து, போராடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!