பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் ஏவுதலில் தொழில்நுட்பக் கோளாறு!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 2026-ஆம் ஆண்டின் முதல் விண்வெளித் திட்டமாக பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் இன்று காலை 10.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்-என்1 உள்ளிட்ட 18 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற இந்த ராக்கெட் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் ஏவப்பட்ட சற்று நேரத்தில் எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ராக்கெட் திட்டமிட்ட பாதையிலிருந்து விலகிச் சென்று இலக்கை அடையவில்லை. இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சம்பவம் தொடர்பான தரவுகள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
ராக்கெட்டின் நான்கு நிலைகளில் முதல் மூன்று நிலைகள் வரை பயணம் சீராக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மூன்றாம் நிலையின் இறுதிக்கட்டத்தில் நுழைந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறினார். இந்த தோல்விக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய உயர்மட்டக் குழு விசாரணை நடத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
