காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை... போலீசார் விசாரணை!

 
தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலையில் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே ஆவரையூரைச்சேர்ந்த தேவேந்திரன் மகன் கவியரசன் (33). தொழிலாளியான இவருக்கும், குரும்பூர் அருகே அம்மன்புரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகள் சுகன்யாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை

கவியரசன் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததாகவும், இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், சுகன்யா வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். சம்பவம் தொடர்பாக பேச்சிமுத்து நேற்று அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து, சுகன்யா தற்கொலை செய்து கொண்டாரா, அவரது இறப்பில் மர்மம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது