பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, இளம்பெண் பலி... 12 பேர் படுகாயம்.. கோவிலுக்கு சென்ற போது சோகம்!
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியிலிருந்து மினி சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டது. 20-க்கும் மேற்பட்டோர் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் நோக்கி சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அந்த கோயிலுக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது.

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில், ஆவடி அருகே வெள்ளானூர் பகுதியில் சென்றபோது பேருந்து சாலை தடுப்பில் மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ரிவேகா (20) என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் சோகம் நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
