பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த தைரியசாலி!

 
இளம்பெண்

கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து அங்கோலா நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் பயணித்துள்ளார். ஜன்னல் இருக்கை விவகாரத்தால் இருவரும் வெவ்வேறு சீட்களில் அமர்ந்துள்ளனர். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் அயர்ந்து தூங்கியுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட காமப் பிசாசு ஒருவன், அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்து பாலியல் ரீதியாக அத்து மீறியுள்ளான்.

ஆம்புலன்ஸ்

திடீரென கண்விழித்துப் பார்த்த அந்த இளம்பெண், வாலிபரின் சில்மிஷத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். ஆனால், பயந்து போய் அமைதியாக இருக்காமல், உடனடியாகத் தனது செல்போனை எடுத்து அந்த வாலிபரின் செயல்களை வீடியோவாகப் பதிவு செய்தார். பேருந்து நின்றதும் அங்கிருந்து நழுவ முயன்ற அந்த 28 வயது வாலிபரை மடக்கிப் பிடித்த இளம்பெண், ஆவேசமடைந்து நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகத் தர்ம அடி கொடுத்தார்.

டெல்லி போலீஸ்

தான் அந்த வாலிபரை வெளுத்து வாங்கிய வீடியோவையும் சமூக வலைதளங்களில் அந்தப் பெண் பதிவிட, அது தற்போது காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது. இந்தப் பரபரப்பான வீடியோவைப் பார்த்த அங்கோலா போலீசார், தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபரைத் தேடி வருகின்றனர். பேருந்தில் தூங்கிய பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வாலிபருக்குப் பாடம் புகட்டிய அந்த இளம்பெண்ணின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!