ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து வீடியோ வெளியீடு!

 
பேருந்தில் பாலியல்

கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து அங்கோலா நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் நடந்த இந்தச் சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் இருந்து நேற்று முன்தினம் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. அந்தப் பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் ஏறியுள்ளார். சகோதரர் ஜன்னல் ஓர இருக்கையில் அமர விரும்பியதால், இருவரும் வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்து பயணித்துள்ளனர். பேருந்து ஓடிக் கொண்டிருந்த போது, அந்த இளம்பெண் அயர்ந்து தூங்கியுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அருகில் அமர்ந்திருந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார். இதில் திடுக்கிட்டு விழித்த இளம்பெண், வாலிபரின் அநாகரிகச் செயலால் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார்.

பேருந்தில் பாலியல்

வெறுமனே பயந்து ஒதுங்கி விடாமல், அந்தப் பெண் உடனடி நடவடிக்கையில் இறங்கினார்: தனது செல்போனை எடுத்து, அந்த வாலிபர் செய்த அநாகரிகச் செயலை ஆதாரமாக வீடியோ எடுத்தார். பேருந்து நின்றதும் தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கிப் பிடித்த இளம்பெண், நடுரோட்டில் வைத்து அவரைச் சரமாரியாகத் தாக்கினார். தான் அந்த வாலிபரைத் தாக்கிய வீடியோவையும், நடந்த சம்பவத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, அங்கோலா போலீசார் தாமாக முன்வந்து (Suo Motu) வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த வாலிபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!