காட்டுப் பகுதியில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை… தப்பி சென்ற காதலன்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. அவரது மகள் உமா (19), தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள தனியார் காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். அதே மையத்தில் கொளக்கட்ட குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவரும் பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கந்தூரி ரங்காபுரம் காட்டுப் பகுதிக்கு சென்றனர். அங்கு பேசிக்கொண்டிருந்த போது திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ராஜேஷ், உமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீசார் உமாவின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
