நடனமாடுவது போல் நடந்த இளம்பெண்ணுக்கு நரம்பியல் நோய்... மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

 
இளம்பெண் நடனம்

ஹைதராபாத்தில் வசித்து வந்த  நரம்பியல் மருத்துவர் ஒரு பெண்ணின் நடையை வைத்தே அவரிடம் இருந்த நரம்பியல் பிரச்சனையை சுட்டிக் காட்டியுள்ளார்.  21 வயது பெண் ஒருவர் நடக்கும் போது அசாதாரண அசைவுகளைக் காட்டத் தொடங்கியதைத் தொடர்ந்து, அவருக்கு வில்சன் நோய் இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்த பெண் நடை கிட்டத்தட்ட நடனம் போல் இருந்தது.

மருத்துவர்

ஆரம்பத்தில் குடும்பத்தினர் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்தாலும், 4 ஆண்டுகளில் அந்த அசைவுகள் தொடர, பேச்சு தடுமாற்றம் போன்ற அறிகுறிகளும் காணப்பட்டன. அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதீர் குமார், இந்த நோயைக் கண்டறிந்ததுடன், அவருக்கு ‘dysarthria’ எனப்படும் பேச்சு நரம்பியல் பிரச்சனையும் இருப்பதாகக் கூறினார்.

முக்கியமாக, அந்தப் பெண்ணுக்கு மஞ்சள் காமாலை அல்லது கருப்பை  சம்பந்தமான எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அதே நேரத்தில்  மூளையின் எம்ஆர்ஐ ஸ்கேன் முடிவுகள் வில்சன் நோயுக்கான குறிப்பான மாற்றங்களை காட்டின.

மேலும், அவர் வலது கை மற்றும் காலில்  “நடனமாடுவது போல” தோன்றிய அசைவுகள், உண்மையில் சிகிச்சை செய்யக்கூடிய ஒரு நரம்பியல் நோயின் அறிகுறியாகவே இருந்தது.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

வில்சனின் நோய் என்பது மிக அரிதான மரபணுக் குறைபாடு கொண்ட நோயாகும். இது உடலில், குறிப்பாக கருப்பை மற்றும் மூளையில், அதிகமான செம்பின் சேமிப்பாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.  செம்பு ஒரு முக்கியமான தாது இருந்தாலும்  மிக அதிகளவு செம்பு சேரும்போது அது உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த நோய் பொதுவாக மரபுரிமையாக   பெற்றோர்களிடமிருந்து வருகின்றன. அந்த வகையில் குறைபாடான மரபணுக்கள் பெற்று வரும் குழந்தைகளில் தான் இந்த நோய் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் கண்டறியப்படாமல் விட்டால், வில்சனின் நோய் கருப்பை மற்றும் மூளை ஆகியவற்றில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தி, உயிர் ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web