கடற்கரைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கிராமப்புற பள்ளிகளுக்கான இருக்கைகளாக மாற்றிய இளைஞர்!

 
சீனு


மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் காலை நேரத்தில் கடற்கரையில் ஒரு இளைஞர் தேடித் தேடி பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார். 

மும்பை தாதர் பகுதியில் உள்ள கடற்கரையில் பல வருடங்களாக அதன் பிளாஸ்டிக் குப்பைகளுக்காகவே பிரபலமானதாக இருந்த நிலையில் இன்று கையுறைகள் அணிந்து வாளிகளுடன் தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். 

இந்த அமைப்பை உருவாக்கிய சினு , எந்த பெரிய பின்புலமும் இல்லாமல், அரசாங்க அதிகாரியாகவோ, பெரிய நிறுவனத்தின் நிர்வாகியாகவோ இல்லாத சாதாரண இளைஞர். மும்பையின் கடற்கரைகளை சுத்தம் செய்து கடல் பிளாஸ்டிக்கிற்கு இரண்டாவது வாழ்க்கையை வழங்குவது என்ற அசாதாரண நோக்கத்துடன் சாதாரண மும்பைவாசியாக இருக்கிறார். 

இந்தியாவிலேயே முதன்முறையாக கடற்கரை கழிவு மீட்பு வசதியை சினு உருவாக்கினார். இப்படி கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை வரிசைப்படுத்தி, சுத்தம் செய்து, பதப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். 

சினு

அதன் பின்னர் இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைக் கொண்டு பெஞ்சுகளை உருவாக்க துவங்கினார். 

கடலில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் - பாட்டில் மூடிகள், உணவுப் பொட்டலங்கள், உடைந்த பொம்மைகள் மற்றும் சோப்புப் பாத்திரங்கள் என அனைத்துமே  இப்போது கிராமப் பள்ளிகளுக்கு உறுதியான, குறைந்த விலை பெஞ்சுகளாக மாற்றப்படுகின்றன.

மகாராஷ்டிரா மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிராமப்புறங்களில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு போதுமான இருக்கைகள் உட்பட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த இடைவெளியை நிரப்ப சினு, உள்ளூர் மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றி, பிளாஸ்டிக் கழிவுகளை, நீடித்த பள்ளி தளபாடங்களாக வடிவமைக்க முயற்சி எடுத்தார். இவை நீர்ப்புகா, குறைந்த பராமரிப்பு, மற்றும் குழந்தைகள் உட்கார்ந்து கற்றுக்கொள்ள ஒரு கண்ணியமான இடத்தை வழங்குகிறது.

"குழந்தைகள் குளிர்ந்த தரையில் அமர்ந்திருந்தனர், அதே நேரத்தில் எங்கள் கடற்கரைகளில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பயனற்றதாக இருந்தது," என்று சினு கூறுகிறார். "இரண்டு பிரச்சினைகளையும் இணைத்து ஒரு தீர்வை ஏன் உருவாக்கக்கூடாது? என்று யோசித்ததன் விளைவு" என்கிறார்.

பெஞ்சுகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் பாட்டில் மூடிகள் முதல் மீன்பிடி வலைகள் வரை அனைத்தும் அடங்கும். ஆனால் இந்த முயற்சி வெறும் பெஞ்சுகளைப் பற்றியது மட்டுமல்ல. நாம் கழிவுகளைப் பார்க்கும் விதத்தை மாற்றுவது பற்றியது. நாம் கூர்ந்து கவனித்தால், நாம் தூக்கி எறியும் பொருட்களுக்கும் மதிப்பு இருக்கும் என்பதை ஒவ்வொரு பெஞ்சுகளும் நினைவூட்டுகின்றன. ஒரு காலத்தில் ஒரு சாதாரண வேலையாகக் கருதப்பட்ட கடற்கரை சுத்தம் செய்தல் இப்போது ஒரு இயக்கமாக மாறிவிட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது