மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

 
மாடியிலிருந்து விழுந்து
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து பரோட்டா மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் பெருமாள் (28). ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களாக அவர், சரியாக வேலைக்குச் செல்லாததுடன், நாள்தோறும் மது குடித்துவிட்டு, இரவில் மொட்டை மாடியில் தூங்கியதாக தெரிகிறது. 

உயிரிழப்பு

நேற்று முன்தினம் இரவு மது குடித்த நிலையில், வழக்கம் போல் மாடியில் தூங்கச் சென்றுள்ளார்.  நேற்று காலை வீட்டு முன்புள்ள பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ள தெருவில் விழுந்து கிடந்ததாக தகவல்கள் வெளியானது. 

அவர் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உறவினர்களும், அப்பகுதியினரும் வந்து பார்த்தபோது, அவர் தலையில் அடிப்பட்ட நிலையில் இறந்திருந்தார். 

இது குறித்த தகவலின் பேரில், போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web