ஓடும் ரயிலில் ப்ளாட்பார்ம் இல்லாத பக்கத்தில் இறங்கியதால் இரும்பு கம்பியில் குத்தி இளைஞர் துடிதுடித்து பலி!

 
ஓடும் ரயிலில்  ப்ளாட்பார்ம் இல்லாத பக்கத்தில் இறங்கியதால்  இரும்பு கம்பியில் குத்தி  இளைஞர் துடிதுடித்து பலி!  
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்   27 வயது இளைஞர் ஒருவர் தவறான பக்கம் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்தார். அப்போது, இரும்பு வேலியில் சிக்கி துடிதுடித்து பலியானார்  ஜோகேஸ்வரியில் வசித்து வந்தவர் திலா ராஜேஷ் ஹமீரா. இவர்  காலை 10 மணிக்கு  மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நம்பர் 4 பிளாட்பார்முக்கு அருகே, வேக ரயில்கள் செல்லும் பாதைக்கும், புறநகர்  பாதைக்கும் இடையே உள்ள இரும்பு வேலியில் சிக்கி, கழுத்தை நெரித்த நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.  

பிளாட்பார்மில் இல்லாத பக்கத்தில் இருந்து ரயிலில் இறங்க முயற்சித்தபோது, அவர் கழுத்து இரும்பு கூர்மையான வேலியில் சிக்கிவிட்டது. இதனால் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கலாம் எனக்  கூறப்படுகிறது. ரயில்வே போலீசார் மற்றும் நிலைய அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து, அவரது உடலை நயர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வரும் முன்னே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்நிலையில், ஹமீரா ஏன் பிளாட்பாமில் இல்லாத பக்கம் இறங்க முயற்சித்தார் என்பது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  உடலுக்கு போஸ்ட் மார்டம் நடைபெற்று வருவதால் முழுமையான விபரங்கள் பின்னர் வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளது. மேற்கத்திய ரயில்வே அதிகாரிகள் பயணிகள் அனைவரும் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும்  ஓடும் ரயில்களில் இருந்து தவறான பக்கம் இறங்கும் முயற்சி பேரழிவை ஏற்படுத்தும் எனவும் தீவிர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது