தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்கள் அதிர்ச்சி !

 
கவிதா

தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மத்தியில் ஆட்சிசெய்யும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாஜக, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்யும் நிலையில், டெல்லி மதுபான விற்பனை கொள்கை குறித்த முறைகேடு புகாரில் கே.சந்திரசேகர் ராவ்-யின் மகள் கவிதா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

கவிதா

இது தொடர்பாக அவரிடம் கடந்த வாரம் ஒரேநாளில் 9 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக எதிர்க்கட்சிகளை அரசு அமைப்புகள் மூலம் மிரட்டுவதாக கே.சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், கே.சந்திரசேகர் ராவுக்கு நேற்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கவிதா

வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்து, மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது, வயிற்றில் சிறிய புண் (அல்சர்) இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவரது மற்ற உடல் அளவுருக்கள் அனைத்தும் இயல்பாகவே உள்ளன என்று சிகிச்சை அளிக்கும் ஏஐஜி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.    

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web