வெனிசுலாவில் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவி ஏற்றார்!

 
டெல்சி
 

வெனிசுலாவை நிலையான, நம்பகமான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளங்களை பாதுகாக்க ராணுவம் களத்தில் நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே ஜனவரி 3-ம் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கையில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

கைது செய்யப்பட்ட மதுரோ, வெனிசுலாவிலிருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர். புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரோவுக்கு எதிரான வழக்கை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் அவர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த நிலையில் வெனிசுலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில் ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். அவரது சகோதரரும் தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!