தொலைத் தொடர்பு சேவை பாதிக்கும் அபாயம்... எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி !
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் கடைகள் போன்ற வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டு, வீட்டு உபயோகத்திற்கும் அத்தியாவசிய தேவைகளுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி முதல் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை தயாரித்து நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் டவர் தயாரிப்பு பணிகள் படிப்படியாக குறையும் அபாயம் இருப்பதாக நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தொலைத்தொடர்பு கோபுரங்களை தயாரிக்க உலோகங்களை சூடாக்குதல் மற்றும் துரு ஏற்படாமல் பாதுகாப்பு பூச்சு பூசுதல் போன்ற பணிகளில் எரிவாயு அவசியமாக பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி, டவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான எரிவாயு மற்றும் டீசலை சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
