மார்ச் முதல் வாரமே வெயில் தீவிரமடையும்... தனியார் வானிலை ஆய்வாளர் !

 
 வெயில்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மார்ச் முதல் தொடங்கும் வெப்பம் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெயில்

மார்ச் முதல் மே வரை உள்ள 12 வார கோடை காலத்தில், 4 முதல் 6 வாரங்கள் கடும் வெப்பமும் வறண்ட வானிலையும் நிலவும். 2 வாரங்கள் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பெய்யும். 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலை காணப்படும். மார்ச் இறுதி வாரத்தில் வெப்பசலன மழை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும், அதே நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையாது என்றும் கூறினார்.

வெயில் வெப்பம் மாணவிகள் கல்லூரி

இந்த நீடித்த வெப்பத்திற்கு ‘எல்நினோ’ அமைப்பு காரணமாக இருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2026 ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027 ஆண்டு மிக அதிக வெப்பமான ஆண்டாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலை தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!