மக்களே உஷார்... மார்ச் 6, 7ல் வெப்பம் உயரும் !
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மார்ச் 6, 7 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி வரை உயரக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வெப்பம் இயல்பை விட 2 டிகிரி அதிகமாக இருந்தது. ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டி பதிவாகியது. மார்ச் 3 முதல் 6 வரை பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நீடிக்கும்.

மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர பகுதிகளில் மார்ச் 7 முதல் 9 வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். மற்ற பகுதிகளில் வறண்ட நிலையே தொடரும். மார்ச் 4, 5 தேதிகளில் அதிகாலை நேரத்தில் சில இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பனி தாக்கம் இருக்கும்.

Chennai மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் சில இடங்களில் மிதமான பனிமூட்டம் உருவாகலாம். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி வரை இருக்கும். மக்கள் வெயிலில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
