வீட்டை விட்டு வெளியே வராதீங்க!! இன்று வெப்பநிலை அதிகரிக்கும்!!

 
வெதர்மேன் வெயில்

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். இதேபோல் நாளை முதல்  ஜூலை  21ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெயில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்  சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.   

வெயில்
இந்நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை இன்று அதிகரிக்கக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக  38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ்  வரையும்,  மற்ற  இடங்களில் இயல்பில் இருந்து 2 முதல் 4  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web