பெற்றோர்களுக்கு கோவில்.. இலவச குடிநீர்... பூர்வீக கிராமத்தில் ரஜினி அசத்தல்!

 
rajini

சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.இவருடைய  பூர்வீக கிராமம் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம்.இந்த  கிராமத்தில் ரஜினிகாந்த் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்துள்ளார். இந்த கிராம மக்களுக்கு ரஜினி காந்த் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் ஆடு மாடுகளுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரஜினி இன்னும் நேரடியாக வரவில்லை என்ற மனக்குறை இந்த கிராமத்து மக்களுக்கு இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாச்சிக்குப்பம் கிராமம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா  3  மாநில எல்லைகள் சந்திக்கும் இடமாக அமைந்துள்ளது.  நடிகர் ரஜினிகாந்தின்  முன்னோர்கள்  பெற்றோர் இக்கிராமத்தில்  தான் வாழ்ந்து வந்ததாகவும், அவருடைய உறவினர்கள் இன்றைக்கும் இக்கிராமத்தில் வசித்து வருவதாகவும் இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரஜினி சத்திய நாராயணா

அம்மா ரமாபாய், தந்தை ராமோஜி ராவ். அவருக்கு கான்ஸ்டபிள் ஆக வேலை கிடைக்கவே ரஜினியின் குடும்பம் பெங்களூருவிற்கு குடியேறி விட்டது.  ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் இப்பவும் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த கிராமத்தில்  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினி தனது பெற்றோர் ராமோஜிராவ் - ரமாபாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கி போட்டார்.  அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் கையால் அப்போதே அடிக்கல் நாட்டப்பட்டது. நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு, பெயர் பலகை வரை விறுவிறுவென வேலை நடந்தது. ஆனால் அதன் பிறகு  எவ்வித பணிகளும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரது ரசிகர்கள் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை அந்த இடத்தில் வைத்தே  நடத்தி வந்தனர்.

 சில ஆண்டுகளுக்கு முன்பு  ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்த போது அதில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற ரசிகர், நீங்கள் பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் உங்களது பெற்றோர்க்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.  அதற்கு ரஜினி, கண்டிப்பாக கட்டுவேன் என கூறி உறுதி கொடுத்தார். ரஜினியே எதிர்பார்க்காத அந்தக் கேள்வியை கேட்ட ரசிகருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பொறுப்புக்களும் வழங்கப்பட்டன.  பூர்வீக ஊரின் சூழல் குறித்து அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்ட நடிகர் ரஜினி அண்ணன் சத்யநாராயணாவை நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு அனுப்பி  அங்கு வசித்து வந்த  ரஜினியின் மாமா துக்காராம், அத்தை சரஸ்வதிபாய் ஆகியோரை சந்திக்க செய்தார். அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக அண்ணன் மேற்பார்வையில் ரஜினியின் பெற்றோர் ரானோஜிராவ் - ராம்பாய் சிலைகளுடன் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.

சத்திய நாராயணா

இங்கு நினைவிடம் எழுப்பப்பட்டு இதே இடத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்றாலும் ரஜினி இங்கு ஒருமுறை கூட நேரில் வரவில்லையே என்பது கிராம மக்களின் மனக்குறையாக உள்ளது. இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்ட போது ரஜினிகாந்த் எங்கள் ஊர்காரர் என்பது எங்களுக்கு பெருமை தான். ஆனால் இதுவரை அவர்  ஒரு முறை கூட நேரில் வரவில்லை என்பது பெரிய மனக்குறையாக உள்ளது. அரசியலுக்கு வந்திருந்தால், ஒருவேளை அவர் இங்கு வர வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைக்கப்பட்டுள்ளதால், ரஜினி ஒருமுறையாவது வருவார் என நம்புகிறோம் என்று கூறியுள்ளனர். இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ரஜினிக்கு வீடியோக்கள், படங்கள் எடுத்து அனுப்பி வைத்தும், தகவல்கள் பரிமாறிக் கொள்கிறோம். இங்கு வர வேண்டும் என்கிற ஆசை அவருக்கும் உள்ளது. ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு , தனிப்பட்ட வேலைகள் என பல்வேறு காரணங்களால் தள்ளிப் போகிறது. நிச்சயம் இங்கு ரஜினி ஒரு நாள் வருவார். நான் அடிக்கடி இங்கு வந்து பணிகளை மேற்பார்வை செய்து வருகிறேன் என அவருடைய அண்ணன் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web