வீடு தேடி வரும் கோவில் பிரசாதங்கள்!! அமைச்சர் அதிரடி!!

 
சேகர்பாபு

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. இவர் அமைச்சராக பதவியேற்றது முதல் திருக்கோயில்களில் புனரமைப்பு, கும்பாபிஷேகம் உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் தொழில்நுட்ப அடிப்படையில் மேம்பாடுகளையும் செய்து வருகிறார். இவரது செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்தவகையில்  தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு உள்ளிட்ட பன்முக தகவல்களின் பெட்டகங்களாக திகழும் திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் அவற்றின் சேவைகளை, நவீன தொழில்நுட்பத்துடன் அனைவரும் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் "திருக்கோயில்" என்ற செயலியை இந்து சமய அறநிலையத்துறை   சார்பில் வடிவமைத்துள்ளார்

வீடு தேடி வரும் பழனி பஞ்சாமிர்தம்!

.இந்த ஆப் மூலம் கோயில்கள் குறித்த தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், ஆகியவற்றுடன் அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலியும் திருவிழாக்களின் நேரலை  இவைகளை கண்டு மகிழலாம். அத்துடன் தபால் மூலம் கோயில் பிரசாதங்கள் பெறலாம். இந்த செயலி மூலம்  திருக்கோயில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, வழித்தடம், பக்தர்களுக்கான தங்கும் வசதி, சக்கர நாற்காலி வசதி, கழிப்பறை, குளியல் அறை, பொருட்கள் வைப்பறை , தொலைபேசி எண்,  கட்டணமற்ற சேவைகள்   என திருக்கோயில் தகவல்கள் அனைத்தும் ஒரே செயலியின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன.  மேலும் அன்னதானம்,  திருப்பணி உட்பட   எந்தவகை  நன்கொடைக்கும் இந்த செயலி மூலம் கொடை வழங்க முடியும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அறநிலையத்துறை தபால் துறையுடன் இணைந்து   திருக்கோயில் பிரசாதங்களை தபால்   மூலம் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோவில்

இத்திட்டத்தினை அமைச்சர்  சேகர்பாபு  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்திலிருந்து இத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இத்திட்டம் முதல் கட்டமாக 48 முதல் நிலை திருக்கோயில்களில் தொடங்கப்பட்டுள்ளன. மைலாப்பூர் கபாலீஸ்வரர், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி, சமயபுரம் மாரியம்மன், பழனி முருகன், மதுரை மீனாட்சியம்மன் உட்பட 48 கோயில்களின் பிரசாதங்கள் பக்தர்களின் வீடுதேடி வரும் வகையில் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு, “ இந்தியாவில் எங்கிருந்தும் கோவில் பிரசாதங்களை தபால் சேவை மூலம் பெற்று கொள்ளலாம். இன்னும்  3  மாதங்களில் உலகில் எந்த நாட்டில் இருந்தும் திருக்கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் இச்செயலி மேம்படுத்தப்படும்.  சிதம்பரம் நடராஜர் கோவிலின் முறைகேடு குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக கூறிய சேகர்பாபு, சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அறங்காவலர் நியமனம் குறித்த இந்து சமய அறநிலையத்துறையில் செயல்பாடு குறித்து  உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் முதல் கட்டமாக 48 முதல் நிலை கோயில்களில் நடைபாதை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.” எனவும்   குறிப்பிட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web