சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்... நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து !

 
கப்பல்


 
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை  காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. வானிலை மாற்றம் காரணமாக 2024 நவம்பர்  18ம் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் கப்பல் போக்குவரத்து  ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது.

கப்பல்

ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  இதனையடுத்து, நாகை துறைமுகத்தில் இருந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகு இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை இம்மாதம் 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  

சீன சரக்குக் கப்பல்

இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசி வருகிறது. மோசமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும்  இன்று 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மார்ச் 1ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் எனவும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாகை-இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு இருப்பது  சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?