தென்காசி பேருந்து விபத்து... பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு... பலர் கவலைக்கிடம்!

 
பேருந்துவிபத்து
 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கொல்லம்–திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பயங்கர விபத்து நடைபெற்றது. காமராஜர்புரம் பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுக்கு ஒன்று எதிரே வந்தபோது வேகத்தில் மோதியதால் சம்பவ இடமே கலக்கமாக மாறியது. மோதிய தருணத்திலேயே ஆறு பயணிகள் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் அவசரமாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டுச் சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். விபத்தில் 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சிகிச்சை பலனின்றி  மேலும் இருவர் உயிரிழந்த நிலையில், இந்த துயர விபத்தில் பலி எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!