5 பேர் உயிரிழந்த சம்பவம்... தென்காசி முதியோர் இல்லத்திற்கு சீல் வைப்பு!

 
தென்காசி
 

தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த 5 முதியவர்கள் தூத்துக்குடி காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், சுந்தர பாண்டியபுரத்தில் முதியோர் இல்லத்தில் மாமிச உணவு அருந்திய 5 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து முதியோர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி ஆட்சியர் கலெக்டர்

அதன் காரணமாக அங்கு தங்கி இருந்த முதியோர்களை மருத்துவ பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

போலீஸ்

சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியோர்களை வேறு முதியோர் இல்லத்திற்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதில், தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் பரிந்துரையின் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி கிராமம் அன்பு உள்ளங்கள் முதியோர் இல்லத்தில் ஒரு ஆண் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 5 முதியோர்கள் பராமரிப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது