தென்காசி : பங்குனி உத்திர திருவிழா.. நாளை உள்ளூர் விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 
தென்காசி ஆட்சியர் கலெக்டர்

நாளை ஏப்ரல் 5ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்  ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நாளான நாளை பங்குனி உத்திர திருவிழா நடைப்பெறுகிறது. தமிழ் மாதங்களில் 12வது மாதமானது பங்குனி. அதே போன்று 27 நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம். இந்த 12 என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும். எனவே தான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும், நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

Murugan

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 05.04.2023 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Local-holiday

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே மாதம் முதல் சனிக்கிழமையான 6ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் கோடை விடுமுறையில் உள்ள மாணவ மாணவியருக்கு இந்த வேலை நாள் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web