திருவண்ணாமலை கோவிலில் பரபரப்பு... மூலவர் சந்நிதியில் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு!

 
திருவண்ணாமலை கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டிப் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலைப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கும், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கும் இடையே திடீரெனக் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

இந்தச் சம்பவத்தின் விவரமாவது: ஆந்திராவைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 8 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் நேற்று மாலை மூலவர் சந்நிதியில் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது, மூலவர் சந்நிதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பக்தர்களை வேகமாக வெளியே செல்லுமாறு சந்நிதியில் இருந்து இழுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும் ஆந்திர பக்தர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றியதில் கைகலப்பாக மாறியது.

திருவண்ணாமலை

இந்தக் கைகலப்புச் சம்பவத்தினால் கோவிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உட்பட ஓரிரு போலீசாருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தகராறில் ஈடுபட்ட ஆந்திரா பக்தர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!