இந்தியா - வங்காளதேசம் இடையே மீண்டும் பதற்றம்: விசா சேவைகள் ரத்து!

 
வங்காளதேசம்

வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

வங்காளதேச அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சுற்றுலா விசா உள்ளிட்ட அனைத்து பொதுவான விசா சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்கள் மட்டுமே தற்போதைக்குச் செயல்படும்.

டெல்லி, சென்னை, அகர்தலா, கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள வங்காளதேசத் தூதரகங்களில் இந்த விசா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில், இந்தியத் தூதரகங்கள் இலக்கு வைக்கப்பட்டன. இதில் திபு சந்திர தாஸ் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வங்காளதேசம்

வங்காளதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டதும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டதும் சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்றது. இந்தியா இதற்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது.

வங்காளதேச அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவில் (குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில்) போராட்டங்கள் வலுத்தன. இது வங்காளதேச அரசுக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!