பயங்கரம்!! ஆளுநர் வெடிகுண்டு தாக்குதலில் பலி !!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு தீவிர தாக்குதல்கள் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தாலிபன்கள் ஆட்சிபொறுப்பை ஏற்றபிறகு முதல் முறையாக உயர் அதிகாரி ஒருவர் குறி வைத்து தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் வடக்கு பால்க் மாகாணத்தின் ஆளுநராக ஹஜ்ஜி முல்லா முகமது தாவூர் மாஸாமில் இருந்து வந்தார். மாகாணத்தின் தலைநகரான மசார் இ சரீப் பகுதியில் ஆப்கானிஸ்தானின் மசாமிலின் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் இன்று தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் தலிபான்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தாவுத் முஸ்மால் மற்றும் அங்கிருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் உள்ளிட்ட 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தாக்குதலில் ஆளுநர் தாவுத் முஸ்மால் கொல்லப்பட்டதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளளது. அந்நாட்டு அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இஸ்லாத்தின் எதிரிகள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் மாகாண ஆளுநர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. இது துரதிஷ்டவசமானது என்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தனிநபரே குழுவோ பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க