வங்கதேசத்தில் பதற்றம்... இந்து ஆசிரியர் வீட்டைக் கொளுத்தி தாக்குதல்... 116 கொலைகள்!
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகச் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தணியாமல் நீடித்து வருகின்றன. அதன் உச்சகட்டமாக, தற்போது ஆசிரியர் ஒருவரின் வீடு தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் இந்து சமூகத்தைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் பிரேந்திர குமார் டே என்பவரின் வீட்டை குறிவைத்த மர்ம கும்பல், அதற்குத் தீ வைத்துள்ளது. இதில் வீட்டின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகியது. போலி மதக் குற்றச்சாட்டுகளைக் கூறி இந்து குடும்பங்களை மிரட்டுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதும் அங்கு வாடிக்கையாகி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு வன்முறை அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன: கடந்த ஜூன் மாதம் முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை 45 மாவட்டங்களில் சுமார் 116 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 51 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் ஒரே வாரத்தில் 8 இந்துக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கோவில்கள் சூறையாடல், வணிக நிறுவனங்கள் எரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
