மகன்கள் கண்முன்னே பிரபல ரடிவு வெட்டிக்கொலை !! தொடரும் பயங்கரம்!!

 
சீனா

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3ஆவது தெருவை சேர்ந்தவர் சீனா என்ற சீனிவாசன்(40). இவர் அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். சீனிவாசனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பும், இளைய மகன் 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ரவுடி சீனா மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு ரவுடி சீனா தனது இரு மகன்களுடன் அதே பகுதியில் உள்ள உறவினர் மாரிமுத்துவின் 16ம் நாள் காரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

அங்கு வீட்டு வாசலில் தனது மகன்களுடன் நாற்காலியில் சீனா அமர்ந்திருந்த போது 4 பைக்குகள் 8 பேர் கும்பல் திடீரென வந்து இறங்கியது. இதனை அதிர்ச்சி அடைந்த சீனா அங்கிருந்து தப்புவதற்கு, அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன்கள் உடனே அந்த கும்பலை தடுக்க முயன்றபோது, இருவரையும் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து கும்பல் தப்பி சென்றது. இதில் இரண்டு மகன்களும் காயமடைந்தனர். 

சீனா

இதனை பார்த்து பதறிபோன உறவினர்கள் உடனே ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ரவுடி சீனா உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த அவரது மகன்கள் இருவரையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2014ஆம் ஆண்டு ரவுடி சீனா ரவுடி ஒருவரை கொலை செய்ததுடன் 2021ஆம் ஆண்டு ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி நாகூர் மீரான் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றது தெரியவந்தது. 

சீனா

இந்த இரு கொலைக்கு பழிவாங்கும் விதமாக ரவுடி பல்லுவிக்கி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி சீனிவாசனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தப்பி ஓடிய கும்பலை தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web