தென்காசியில் பரபரப்பு... போதையில் தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவருக்கு 3 மகன், ஒரு மகள் இருந்த நிலையில், இவரது 3வது மகன் கணேசன், அடிக்கடி குடிபோதையில் ரகலையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்ற வழக்கம் போல் போதையில் இருந்த கணேசன், விவசாய வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த செல்லையாவிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின் திடீரென ஆவேசமாக ஆத்திரமடைந்த கணேசன், அரிவாளால் தந்தையை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செல்லையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்லையாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மகன் கணேசனை குருவிகுளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
