வான்பரப்பில் பதற்றம்... 4 நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்தது இண்டிகோ!
பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ஈரான் வான்பரப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் ஜனவரி 28ம் தேதி வரை ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், அசர்பைஜான் ஆகிய நான்கு நாடுகளுக்கான விமானச் சேவைகளை இண்டிகோ தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், அந்த நாட்டு வான்பரப்பை கடந்து செல்வது விமானங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என இண்டிகோ கருதுகிறது. இந்த நாடுகளுக்குச் செல்லும் இண்டிகோ நிறுவனத்தின் A320neo ரக விமானங்கள், மாற்றுப் பாதையில் (சுற்றிச் செல்லும்போது) நீண்ட தூரம் பயணிப்பதற்கான எரிபொருள் கொள்ளளவைக் கொண்டிருக்கவில்லை. மாற்றுப் பாதையைப் பயன்படுத்தினால் பயண நேரம் 1 முதல் 2 மணி நேரம் வரை அதிகரிப்பதுடன், கூடுதல் எரிபொருள் செலவும் ஏற்படுகிறது.

இன்று முதல் சில விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக கத்தாரின் தோஹா நகரில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின் இயக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோவைத் தவிர, ஏர் இந்தியா மற்றும் சில சர்வதேச விமான நிறுவனங்களும் ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து வருகின்றன. இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய விமானங்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது.
பயணிகள் கவனத்திற்கு: பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுத் தொகையையும் திரும்ப வழங்க அல்லது மாற்றுத் தேதிகளில் பயணிக்க இண்டிகோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
