சிறைச்சாலையில் பரபரப்பு... மாணவி பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் மர்ம மரணம்!

 
தர்மபுரி தருமபுரி சிறைச்சாலை

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர், திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் திரண்டதால் தருமபுரி அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவியது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் மணிவண்ணன் (55). இவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பள்ளி தலைமை ஆசிரியர் புகார் அளித்தார். இதன்பேரில், கடந்த 16-ம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன், தருமபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த மணிவண்ணனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிறை அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், மணிவண்ணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். ஆசிரியரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கூடம் முன்பு திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பள்ளி மானவி தற்கொலை

இந்த சம்பவம் குறித்து தருமபுரி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நேரில் வந்து சிறையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தார். பின்னர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் பிரேதப் பரிசோதனைக்குச் சம்மதித்தனர். உறவினர்கள் கோரிக்கையின் பேரில் அவர்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, நேற்று இரவு உடல் ஒப்படைக்கப்பட்டது. சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தப்பு செஞ்சா சட்டம் தண்டிக்கும்.. ஆனா சிறைக்குள்ளேயே உயிர் போயிருக்குன்னா அது இயற்கை மரணமா இல்ல வேற ஏதுமான்னு போலீஸ் தான் தெளிவுபடுத்தணும்!"

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!