தாய்லாந்து–கம்போடியா எல்லையில் மீண்டும் பதற்றம்… லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்டகாலமாக இருந்து வரும் எல்லைப் பிரச்னை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இருநாடுகளுக்கிடையே 5 நாட்கள் நடந்த மோதலில் 48 பேர் உயிரிழந்த நிலையில், பின்னர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் முயற்சியால், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தை கடந்த நவம்பர் மாதம் தாய்லாந்து அரசு ரத்து செய்ததாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்த நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி தாய்லாந்து–கம்போடியா எல்லையில் மீண்டும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் எல்லை அருகே வசிக்கும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், தாய்லாந்தின் 4 மாகாணங்களில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 700 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல், கம்போடியா தரப்பில் எல்லை பகுதிகளில் இருந்த 1.27 லட்சத்துக்கும் அதிகமான கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
