பயங்கரம்!! 7 மாடி கட்டிடம் வெடித்து சிதறல்!! 16 பேர் பலி!!

 
டாக்கா

வங்கதேசத்தின் தலைநகரன டாக்காவில் குலிஸ்தான் என்ற பகுதி உள்ளது. மிகவும் பரபரபான இந்த பகுதியில் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வணிக வளாகங்கள், பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

Bangaladesh

பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள இந்த 7 மாடி கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. மாலை 5 மணியளவில் கட்டிடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒட்டுமொத்த கட்டிடமும் நிலைகுலைந்தது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Bangaladesh

கட்டிடத்தில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாய பொருட்கள் தீப்பற்றி வெடித்ததே இந்த கட்டிட வெடிவிபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், 7 மாடி கட்டிட வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கட்டடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web