தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் கவலைக்கிடம்!! 27 பேர் படுகாயம்!!

 
தனியார் பேருந்து

நெல்லை அருகே ஆட்சிமடம் பகுதியில் தனியார் பேருந்து வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இரண்டு வாகனங்களின் டிரைவர்கள் உட்பட 27 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 4 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் முக்காணி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்சிமடம் அருகே பேருந்து சென்றபோது, திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஒருபக்கமாக இழுத்துச்சென்ற பேருந்து எதிரே வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.

தனியார் பேருந்து

இந்த வேனில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு விருதுநகரில் உள்ள ஒரு கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.

இந்த விபத்தில் வேனில் இருந்தவர்களுக்கு அதிகளவில் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தனியார் பேருந்து

இந்த விபத்து தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web