பயங்கரம்... மகளைக் கடத்தி கள்ளக்காதலனுக்கு கட்டாயத் திருமணம்!

 
காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

பெத்த தாயே தனது மகளைக் கடத்தி, தனது கள்ளக்காதலனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 42 வயது பெண்ணின் கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், 18 வயதான இளைய மகளுடன் அந்தப் பெண் வசித்து வந்தார். இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி கந்தன் (31) என்பவருடன் அந்தப் பெண்ணிற்குத் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

திருமணம்

இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த அந்தப் பெண்ணும், அவரது 2-வது மகளும் திடீரென மாயமானார்கள். இது குறித்து மூத்த மகள் அளித்த புகாரின் பேரில், கீழ்கொடுங்காலூர் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். மாயமான பெண்ணின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக கேரளா விரைந்த போலீசார், அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த தாய், மகள் மற்றும் கள்ளக்காதலன் கந்தன் ஆகிய மூவரையும் மடக்கிப் பிடித்துத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அதிகாரிகளையே அதிரவைத்தன. பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் மல்க அளித்த வாக்குமூலத்தில், "எனது தாயும், கந்தனும் சேர்ந்து எனது வாயில் துணியை வைத்து அமுக்கி வலுக்கட்டாயமாகக் கேரளா கடத்திச் சென்றனர். அங்கு வைத்து எனக்கு விருப்பமே இல்லாமல் கந்தன் கட்டாயத் தாலி கட்டினான். எனது தாயின் முன்னிலையிலேயே என்னைக் கந்தன் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தான்" என்று திடுக்கிடும் உண்மைகளைக் கூறினார். தனது கள்ளக்காதலன் கந்தனுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, தனது சொந்த மகளையே அந்தப் பெண் பலிகடா ஆக்கியது தெரியவந்தது.

திருமணம் கல்யாணம் கும்பம்

இதனையடுத்து, ஆள் கடத்தல், கட்டாயத் திருமணம், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கள்ளக்காதலன் கந்தன் மற்றும் மகளைக் காட்டிக்கொடுத்த அந்தத் தாய் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட இளம்பெண் பாதுகாப்பிற்காக அவரது அக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். பெற்ற மகளின் வாழ்க்கையையே சீரழித்த தாயின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!