பட்டாசுகள் ஆலையில் பயங்கர தீ விபத்து.. உடல் சிதறி 2 பெண்கள் உயிரிழப்பு !!

 
முனியம்மாள்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்த மான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலைமுதல் பணியாளர்கள் வழக்கம்போல் பணி செய்துவந்தனர். இதில் பெண்கள் பணியாளர்கள் பலரும் இருந்தனர். 

இந்நிலையில் அவர்கள் பணி செய்துக்கொண்டிருக்கும் போது திடீரென பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த இடம் என்பதால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. மேலும் தீயும் பற்றி எரிந்து பரவியது.

முனியம்மாள்

இந்த நிலையில் தீவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பழனியம்மாள், முனியம்மாள் என்ற இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிவசக்தி என்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார். இவரை தீயணைப்பு துறையினரும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முனியம்மாள்

மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த பட்டாசு சேமிப்பு குடோனில் திருமணம், கோயில் திருவிழா போன்ற விசேஷங்களுக்கு வானவெடி உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வைத்திருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web