பயங்கர பனிமூட்டம்... சென்னையில் 19 விமான சேவைகள் ரத்து; பயணிகள் பரிதவிப்பு!
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நேற்று நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரே நாளில் 19 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

பனிமூட்டத்தின் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கவுகாத்தி, வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதே போன்று சென்னைக்கு வர வேண்டிய டெல்லி, கொல்கத்தா, வாரணாசி, புவனேஸ்வர், ஐதராபாத் உள்ளிட்ட 7 ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

மொத்தம் 19 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், திட்டமிட்ட பயணத்திற்காக வந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பரிதவிப்புக்கு ஆளானார்கள். இருப்பினும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்துப் பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
