விசிக பிரமுகர் வெட்டி படுகொலை !! பரபரக்கும் தலைநகர்!!

 
ரமேஷ்

சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் சென்றுக்கொண்டிருந்தபோது, காரில் வந்த இரண்டு நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 

ரமேஷ்

ரமேஷ் இன்று அதிகாலை தேநீர் கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரமேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து தப்பியோடிய கொளையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரமேஷ்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ரமேஷ் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. விசிக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web