பதறிய மனைவி... கட்டிலுக்கு அடியில் கள்ளக்காதலன் - ஹோட்டல் அறைக்குள் போலீசாருடன் புகுந்த கணவனால் பரபரப்பு!
திருமணமான மூன்றே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதியினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது.
ஜான்சியின் நவபாத் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றிற்குத் தனது மனைவி வேறொரு நபருடன் செல்வதாகக் கணவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. நிலைமை விபரீதமாவதைத் தவிர்க்க நினைத்த கணவர், உடனடியாக 112 என்ற அவசரகால எண்ணிற்கு அழைத்து போலீசாரை வரவழைத்தார். பின்னர் போலீசாருடன் ஹோட்டலின் 103ம் எண் அறைக்குச் சென்றார்.

கதவைத் திறந்தபோது பயந்துபோன கள்ளக்காதலன் கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கிக் கொண்டார். ஆனால், மனைவி எதற்கும் அஞ்சாமல் கட்டிலுக்கு அடியில் இருந்த நபரை வெளியே இழுத்து அனைவர் முன்னிலையிலும் அறிமுகப்படுத்தினார்.

இந்தச் சம்பவத்தின் போது அந்தப் பெண் போலீசாரிடம் கூறிய பதில்கள் அங்கிருந்தவர்களை அதிரவைத்தன: கணவருடன் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாழவில்லை என்றும், அவர் தனது வாழ்வில் ஒரு முடிந்து போன அத்தியாயம் என்றும் திட்டவட்டமாகக் கூறினார். கள்ளக்காதலனுடன் ஹோட்டலுக்கு வந்தது தனது தனிப்பட்ட விருப்பம் என்றும், அவருடன் வாழவே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார். முறையாக விவாகரத்து பெறத் தான் தயாராக இருப்பதாகவும் போலீசாரிடம் வாதிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
