பயங்கரம்... +2 மாணவியும், வாலிபரும் செய்த பிரசவ அறுவை சிகிச்சை - தாய், சேய் உயிரிழப்பு!

 
அறுவை சிகிச்சை

உத்தரபிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் பஸ்கரி பகுதியில் இயங்கி வந்த 'நவ்ஜீவன்' என்ற தனியார் மருத்துவமனையில் பிஏ பட்டதாரியும், +2 மாணவியும் சேர்ந்து பிரசவ அறுவை சிகிச்சை செய்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதில் தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த வாரம் பிரியங்கா என்ற இளம்பெண் பிரசவத்திற்காக பஸ்கரியில் உள்ள நவ்ஜீவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். யோகேஷ் (32) என்ற பி.ஏ பட்டதாரி தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு அறுவை சிகிச்சையை முன்னின்று செய்துள்ளார். சுபம் விஸ்வகர்மா (19) என்ற பிளஸ் டூ மாணவி இவருக்கு உதவியாளராக இருந்துள்ளார். முறையற்ற இந்தச் சிகிச்சையால் பிரியங்காவும் அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

அறுவை சிகிச்சை மருத்துவம் பிரசவம்

போலீசாரின் விசாரணையில், யோகேஷின் தந்தை அரசு சுகாதார மையத்தில் வார்டு பாயாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தையுடன் சென்ற போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பார்த்தே யோகேஷ் 'மருத்துவம்' கற்றதாகக் கூறப்படுகிறது. போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றிய யோகேஷ், சுபம் விஸ்வகர்மாவின் தந்தை நடத்தி வந்த நர்சிங் ஹோமில் அறுவை சிகிச்சைகளைப் பார்த்துத் தானும் செய்யத் தொடங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சந்தீப் அளித்த புகாரின் அடிப்படையில், யோகேஷ் மற்றும் சுபம் விஸ்வகர்மா ஆகிய இருவரையும் பஸ்கரி பஜாரில் போலீசார் கைது செய்தனர். முறையான அனுமதியின்றி இயங்கி வந்த நவ்ஜீவன் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தலைமறைவாக உள்ள மருத்துவமனை உரிமையாளர் ரூபியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

அம்பேத்கர் நகர் பகுதியில் அண்மைக்காலமாகப் பிரசவத்தின் போது தாய், சேய் இறப்பு அதிகரிப்பதாகப் புகார்கள் எழுந்தன. மாவட்ட ஆட்சியர் அனுபம் சுக்லா அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையில், தனியார் மட்டுமன்றி அரசு மருத்துவமனைகளிலும் மரணங்கள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. தீவிர ஆய்வுகளுக்குப் பிறகும் இந்த நவ்ஜீவன் மருத்துவமனை மட்டும் அதிகாரிகளின் கண்ணில் படாமல் தப்பி இயங்கி வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!