பதற வைக்கும் வீடியோ!! திடீரென சாலையில் வெடிப்பு!! இளம்பெண் படுகாயம்!!

 
குடிநீர் குழாய்

இந்தியாவில் வடமாநிலங்களில் சமீபகாலமாக பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.இதனால் மக்கள் ஏற்கனவே அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் மக்களின் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட அதிர்வால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது. 

Maharastra

அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிசி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சியடிப்பதும், அப்போது பழுப்பு நிற தண்ணீர் அலையின் கீழ் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த பெண் ஸ்கூட்டர் ஓட்டி வருவதும் பதிவாகி இருந்தது. 


மேலும் சாலையில் விரிசல் ஏற்பட்ட காட்சிகளும் அதில் உள்ளன. குடிநீர் குழாயில் இருந்து வெளிவந்த தண்ணீர் அங்கிருந்த ஒரு பள்ளம் முழுவதும் நிரம்பி வெளியேறியது. மேலும் சாலை முழுவதும் கற்களும் சிதறி கிடந்தன. இந்த வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்


இந்த சம்பவத்தை நேரில் கண்ட பூஜா பிஸ்வாஸ் கூறுகையில், “நான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ​​நிலத்தடி குழாய் வெடித்ததால், தண்ணீரின் விசையால் சாலை விரிசல் திறந்து கிடப்பதைக் கண்டேன். அப்பகுதியில் தண்ணீர் நிரம்பியதால் மக்கள் அச்சமடைந்தனர்” என்று கூறினார்.

From around the web