காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்... திருத்தணி ராணுவ வீரர் சக்திவேல் வீர மரணம்!

 
திருத்தணி சக்திவேல்

காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சக்திவேல் (30), தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு வீர மரணம் அடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிவேலின் மகன் சக்திவேல். இவர் 2018-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தவர்.

திருத்தணி சக்திவேல்

நேற்று காலை 11 மணியளவில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதிகளுடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர் சக்திவேல், தீவிரவாதிகளின் எதிர் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். இந்திய ராணுவம் சார்பில் இந்தத் தகவல் திருத்தணி காவல் நிலையம் மற்றும் சக்திவேலின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள்

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேலின் உடல், காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்து இன்று அவரது சொந்த ஊரான சத்திரஞ்ஜெயபுரம் கொண்டு வரப்படுகிறது. அங்கு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வீர மரணம் அடைந்த சக்திவேலுக்கு தேவஸ்ரீ (26) என்ற மனைவியும், ஆஷிகா செர்லின் (4) என்ற மகளும், லெனின் அக்ரன் (2) என்ற மகனும் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!