ஹோலி கொண்டாட்டத்தில்.. கலர் பொடி வீசியதால் இளைஞர் உயிருடன் தீவைத்து எரிப்பு!

 
ஹோலி

ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, வட மாநிலங்களில் இந்த பண்டிகை  களைகட்டியது.  ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசியும், மலர்களை வீசியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

இந்நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலர் பொடி வீசியபோது நடந்த தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் மேதக் மாவட்டத்தில் உள்ள மாரப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர்கள் அம்பாதாஸ், முகமது அப்துல் ஷபீர். இருவரும் நண்பர்கள் ஆவர்.

ஹோலி

நேற்று ஹோலி கொண்டாட்டத்தின்போது ஜாலியாக அம்பாதாஸ் நண்பர் முகமது ஷபீர் மீது கலர் பொடிகளை பூச வந்துள்ளார். அப்போது தனக்கு பிடிக்காது என்பதால் கலர்பொடியை பூச வேண்டாம் என ஷபீர் கூறியுள்ளார். ஆனால், அதையும் மீறி ஷபீர் மீது அம்பதாஸ் கலர் பொடியை அப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஷபீர் தனது பைக் இருந்து பெட்ரோலை எடுத்து அதை அம்பாதஸ் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.

ஹோலி

இதைப் பார்த்து பதறிப்போன அக்கம் பக்கத்தினர், எரிந்து கொண்டிருந்த அம்பாதாஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அம்பதாஸ் உடலில் 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாகவும், அதேவேளை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிவிட்டார் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான புகாரில், நண்பனை தீவைத்து எரித்த முகமது ஷபீர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web