கரூரில் பயங்கரம்... கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி 18 மாணவர்கள் படுகாயம்!

 
விபத்து விபத்து

கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்திற்குள்ளனாதில் 18 மாணவர்கள் படுகாயமடைந்தனர். கரூர் மாவட்டம் வெள்ளியனை பகுதியில் ரயில்வே கேட் ஒன்றைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து ஒன்று, திடீரென தண்டவாளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளனாது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலியூர் பகுதியில் உள்ள சிமெண்டு ஆலைக்கு, ஜல்லி ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில், தண்டவாளத்தில் சிக்கியிருந்த பேருந்தை மோதி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆம்புலன்ஸ்

காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!